குன்னூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு


குன்னூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:48+05:30)

குன்னூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு

நீலகிரி

குன்னூர்

தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து சிறப்பு மலை ரெயிலில் குன்னூர் வந்தனர். அவர்கள் குன்னூர் ரெயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். தொடர்ந்து குன்னூர் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பொது மேலாளரிடம் மனு அளித்தனர். மனுவில் மலைப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தியுள்ளதாகவும். அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொது மேலாளர் மல்லையா அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் பயண்படுத்தி வந்த கேன்டீன் தற்போது மூடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் கேண்டீன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரக்கூடிய காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் பொருட்டு சிறப்பு மலை ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story