புதுமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

பரமத்திவேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள புதுமாரியம்மன் கோவிலில் 48-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி 26-ந் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது. இதையொட்டி 3-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 4-ந் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 5-ந் தேதி மாலை அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சந்தைபேட்டையில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து அம்புசேர்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவில் நவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story