கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சாமிநாதன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊக்க தொகையை வழங்க வேண்டும். ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கவேண்டி கல்வி உதவித்தொகையை காலதாமதம் செய்யாமல் உடனே பட்டுவாடா செய்ய வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மகளிர் கமிட்டி தலைவர் வித்யா நன்றி கூறினார்.


Next Story