நேரு பிறந்தநாள் விழா
Nehru's birthday celebration
தூத்துக்குடி, கழுகுமலை, கயத்தாறு பகுதியில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நேரு பிறந்தநாள்
தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாநில பேச்சாளர் அம்பிகாபதி் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்குகோனார்கோட்டை பள்ளி
கயத்தாறு அருகே உள்ள தெற்குகோனார்கோட்டை தமிழ் பாப்ஸ்திது ெதாடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் ராசையா தலைமை தாங்கினார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் உருவப்படத்திற்கு கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி ஆசிரியர் ஜெயராணி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கழுகுமலை பள்ளி
கழுகுமலை ஆறுமுகம் நகர் விமல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் தங்கத்தாய் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். தொடர்ந்து எல்.கே.ஜி முதல் 12 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, மாறு வேட போட்டி, நடன போட்டி, கவிதை போட்டி மற்றும் கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களும் நடனமாடி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர். இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பொன்மாரியப்பன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கவுதம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கனிசாமி நன்றியுரை கூறினார்.