குரூஸ்பர்னாந்து சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
Political parties pay tribute to Kruseparnandu statue by garlanding it
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள்
தூத்துக்குடி நகர மக்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்தவர் குரூஸ் பர்னாந்து. அவரது பிறந்தநாள் விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், , மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, செந்தூர்பாண்டி, எஸ். பி.ராஜன், பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் பிரைட்டர், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், ம.தி.மு.க. மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரதர் நலச்சங்கம்
தூத்துக்குடி மாவட்ட பரதர் தலைமை நலச்சங்கம் சார்பில் தலைவர் ரெனால்ட் வில்லவராயர், பொதுச்செயலாளர் அந்தோணி சாமி, பொருளார் ஜாய் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, சேவியர் வாஸ், விசைப்படகு சங்க பொதுச்செயலாளர் பெபின், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் கவுன்சிலர் எட்வின்பாண்டியன், குரூஸ் பர்னாந்து பேத்தி ரெமோலா, முன்னாள் பேராசிரியை பாத்திமா பாபு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அனைத்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் பரதர் நல தலைமை சங்கம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.