தூத்துக்குடியில் குழந்தைகள் தினவிழா
Children's Day Festival in Tuticorin
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மெட்ரோ துரை தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 65 குழந்தைகளுக்கு விளையாட்டுக்கான சீருடைகள் வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டி நடத்தப்பட்டன.
இதே போன்று புதூர் பாண்டியாபுரம் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை முத்துச்செல்வி தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர் கே.மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் சில்வர் புரம், நயினார்புரம் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.