தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
Near Tuticorin Wanted for murder Saran in Juvenile Court
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தூத்துக்குடி அருகே மகிழ்ச்சிப்புரத்தைச் சேர்ந்த லிங்கப்பாண்டி மகன் சின்னத்துரை (வயது 32). மீன்வியாபாரி. இவர் சம்பவத்தன்று தட்டப்பாறை வடக்கு சிலுக்கன்பட்டியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதில் நேற்று முன்தினம் மாரிகிருஷ்ணன், ஸ்டீபன்ராஜ், முத்துவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாங்கியூர் சந்தோஷ் மகன் சுயம்புலிங்கத்தை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று சுயம்பு லிங்கம் சாத்தானகுளம் குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலையரசி ரீனா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story