ஊட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

பால் விலை உயர்வை கண்டித்து ஊட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமவெளி பகுதிகளில் ஒரு லிட்டர் பால் ரூ.12 வரையும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.16 வரையும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.6 விலை உயர்த்தப்பட்டு, ரூ.4 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, பால் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர்.

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகர தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். கூடலூர் அருகே சூண்டி பஜாரில் கூடலூர் தெற்கு மண்டல தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் மாநில சிறுபான்மை அணி செயலாளர் அன்பரசன் தலைமையிலும், கீழ் கோத்தகிரி பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி போஜராஜன் தலைமையிலும், கட்டபெட்டு பகுதியில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story