குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்


குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 5:37 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே சேலக்குன்னா, அத்திகுன்னா உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பட்டி-தேவாலா சாலையில் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, குடியிருப்புக்குள் புகுந்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story