குறைந்த வாடகையில் நவீன வேளாண் எந்திரங்கள்


குறைந்த வாடகையில் நவீன வேளாண் எந்திரங்கள்
x

Modern agricultural machinery at low rent

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வேளாண் எந்திரங்களான டிராக்டர்கள் 4, டயர் வகை மண் அள்ளும் எந்திரம், மண் தள்ளும் எந்திரம் 1, பல்வகை தானியங்கள் கதிரடிக்கும் எந்திரம் 1, கரும்பு நடவு எந்திரம் 1, கரும்பு கட்டை சீவும் கருவி 1, சோளம் அறுவடை செய்யும் கருவி 1, ரோட்டாவேட்டர் 3, கலப்வை 2 மற்றும் ஐந்து கொத்து கலப்பை 4 உள்ளிட்ட கருவிகள் மற்றும் எந்திரங்கள் உள்ளது.

குறைந்த வாடகை

டிராக்டரில் இயங்கக்கூடிய எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு டிராக்டருடன் சேர்த்து ஒரு மணிக்கு ரூ.500 என்ற குறைந்த வாடகையில் இ வாடகை செயலி மூலம் முன் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றது. டயர் வகை மண் அள்ளும் எந்திரம் மணிக்கு ரூ.890-க்கும், மண் தள்ளும் எந்திரம் மணிக்கு ரூ.1,230-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்ட புதிய மற்றும் நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் திருப்பத்தூரில், சிவசக்தி நரில், புதுப்பேட்டை ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் திருப்பத்தூர் (செல்: 8270625964), ஜோலார்பேட்டை (9345012605), நாட்டறம்பள்ளி (9629126512), ஆலங்காயம் (7639139188), வேலூர் (0416-2266603), மாதனூர் (8667705094), இளநிலை பொறியாளர் கந்திலி (9894412545) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story