விளையாட்டு போட்டிகள்
கூடலூர் அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மன இறுக்கத்தை குறைக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. கூடலூர் சைல்டு லைன் அமைப்பு சார்பில் நடந்த போட்டிகளுக்கு தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகள் இடையே கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியரிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகள் நண்பர் வாரத்தை ஒட்டி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ராக்கி கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும், அவர்களின் செயல்பாடுகளை சீரமைத்துக் கொள்ளும் வகையிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story