மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட அளவில் நீச்சல் வீரர்கள் தேர்வு


மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க  கடலூர் மாவட்ட அளவில் நீச்சல் வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

To participate in state level competition Selection of swimmers at Cuddalore district level

கடலூர்

பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான நீச்சல் மற்றும் டேக்வாண்டோ போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட அளவிலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நீச்சல் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை காண்பித்தனர். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர் ஜவகர், சசிகுமார், கமல்பாஷா, ராஜாராம், பூங்குழலி, பாபு, ஜெயதேவன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story