பதவி இறக்கம் செய்வதை கைவிடக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக தனி அதிகாரிகள் சாலை மறியல்


பதவி இறக்கம் செய்வதை கைவிடக்கோரி  அண்ணாமலை பல்கலைக்கழக தனி அதிகாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

To avoid demotion Annamalai University special officials road blockade

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளாக சுமார் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் இவர்களை பதவி இறக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பதவி இறக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை கைவிடக்கோரி தனி மற்றும் தொடர்பு அலுவலர்கள் நேற்று மதியம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்‌.கதிரேசனை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர், இதுகுறித்து அரசுதான் முடிவு செய்யும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் பல்கலைக்கழக வளாக நுழைவு வாயில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி கொள்ளுங்கள் உடனே மறியலை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story