அரசு பள்ளி கட்டிடங்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
புளியங்குடியில் அரசு பள்ளி கட்டிடங்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
தென்காசி
புளியங்குடி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை பார்வையிட்டார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டிடங்களை பார்வையிட்டு அவற்றின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து புளியங்குடி அய்யாபுரம் கிராமத்துக்கு சென்று அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது புளியங்குடி நகராட்சி ஆணையாளர் சுகந்தி, புளியங்குடி நகரசபை தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story