நேரு பிறந்த நாள் விழா
வாசுதேவநல்லூரில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட நேரு உருவப்படத்திற்கு பள்ளியின் தாளாளர் கு.தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவ-மாணவிகள் நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் கவிதா உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story