ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு ஊழியர்கள் நடைபயணம்


ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு ஊழியர்கள் நடைபயணம்
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 12:19 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு ஊழியர்கள் நடைபயணம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

சட்டமன்றத்தேர்தலின் போது புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆணையை வெளியிட வலியுறுத்தி ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து நேற்று ராமநாதபுரம் வரை நடைபயண போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினார்கள். முன்னதாக அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், மாநில தணிக்கையாளர் சோமசுந்தர், உயர்நிலை அலுவலர்கள் சங்க பொறுப்பாளர் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.இந்த போராட்டத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ராமநாதன், சிவக்குமார், பரமசிவம், கோவிந்தன், ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, அரசின் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து நடை பயணமாக புறப்பட்ட அரசு ஊழியர்கள் தங்கச்சிமடம், அக்காள்மடம், பாம்பன் மற்றும் ரோடு பாலம் வழியாக மண்டபத்தில் சென்று முதல் நாள் போராட்டத்தை முடித்தனர்.தொடர்ந்து 2-வது நாளாக இன்று மண்டபத்தில் இருந்து தொடங்கும் நடைபயண போராட்டத்தை தொடங்கி உச்சிப்புளி வரை செல்ல உள்ளனர்.


Related Tags :
Next Story