மாநில அளவிலான கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
Government school students selected for state level kabaddi tournament
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்ட கபடி போட்டியில் பல பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பழனிவேல் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் முரளி, சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story