சபரிமலை கோவிலுக்கு மாலை அணியும் நிகழ்ச்சி; பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்


சபரிமலை கோவிலுக்கு மாலை அணியும் நிகழ்ச்சி; பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்
x

garlanding ceremony for Sabarimala temple; Sales of puja items intensified

புதுக்கோட்டை

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணியும் நிகழ்ச்சி கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளை (வியாழக்கிழமை) நடைெபறுகிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை 1-ந் தேதியன்று அதிகாலையில் கோவில்களில் வழிபட்டு துளசிமாலை அணிந்து காவி வேட்டி உடுத்தி விரதத்தை தொடங்குவார்கள். அதற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். புதுக்கோட்டையில் அய்யப்பன் கோவில் மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான துளசி மாலை, ருத்ராட்ச மாலை, மணி மாலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இந்த பூஜை பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மாலைகளில் 54, 108 எண்ணிக்கை கொண்ட மணிகள் உள்ளது. இதே போன்று அய்யப்பன், முருகன் உருவப்படங்கள் கொண்ட டாலர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் காவி, நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற வண்ணங்களில் வேட்டிகள் திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விரதமிருந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அதிக அளவில் பொருட்களை வாங்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம், என்றார்.


Next Story