பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2022 7:23 PM GMT (Updated: 15 Nov 2022 7:48 PM GMT)

பால் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டை வட்டார பகுதிகளில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பால் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டை வட்டார பகுதிகளில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் ஆவின் பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வைக் கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பா.ஜனதா தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் வக்கீல் முரளிகணேஷ், மாவட்ட துணைத்தலைவர் அன்பு, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர்கள் சூரை சண்முகம், செம்பை கோவிந்தராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்தாமரை வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாநில மகளிர் அணி செயலாளர் குயிலி, மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் குகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஒரத்தநாடு

பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி தலைவர் அருண், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் போஸ், கவுசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை, வீரசிங்கம், மாவட்ட துணைத் தலைவர் அத்திவேதா, மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசுகையில், 'அதிராம்பட்டினத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும். பால் விலை உயர்வு, மின்சார கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்' என்றார்.

திருச்சிற்றம்பலம்

பால் விலை மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பேராவூரணி வடக்கு ஒன்றிய தலைவர் உப்புவிடுதி ராசு தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி, கட்சியின் மூத்த உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய பார்வையாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில விவசாய அணி துணை தலைவர் பண்ணவயல் இளங்கோ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கட்சியின் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் பாலசுப்ரமணியன், தரவு தள மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வராசு, கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் குமார், பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சேதுபாவாசத்திரம்-பேராவூரணி

சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லை கடைவீதியில் பா.ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் குகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, பெரியநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றிய தலைவர் அய்யா வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வீரசிங்கம், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் சண்முகநாதன், ஒன்றிய பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேல உளூர்

இதேபோல் மேல உளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கர்ணன், மாவட்டத் துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊரணிபுரம்

ஊரணிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவோணம் வடக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரதுரை, திருவோணம் தெற்கு ஒன்றிய தலைவர் காளிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் துரை, கலை இலக்கிய மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பார்வையாளர்கள் தியாகராஜன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பால் விலை உயர்வு, மின்சார கட்டண அதிகரிப்பு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story