வாளாடி, சோமரசம்பேட்டை, இனியானூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


வாளாடி, சோமரசம்பேட்டை, இனியானூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

Power outage tomorrow in Valadi, Somarasampet and Iniyanoor areas

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துைற, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்) ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கல்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முல்லிக்கரும்பூர் மற்றும் பெரியகருப்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story