துலுக்கப்பட்டி பகுதியில் நாளை மின்தடை


துலுக்கப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 16 Nov 2022 1:52 AM IST (Updated: 16 Nov 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

துலுக்கப்பட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து ஆவுடையாபுரம் செல்லும் மின் பாதையில் நாளை (வியாழக்கிழமை) பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நடுவப்பட்டி, சந்தையூர் கோவில், புலிக்குத்தி, சி. ராமலிங்காபுரம் ஆகிய கிராம பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story