விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள்


விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:30 AM IST (Updated: 24 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

தேனி

தேனி அருகே பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போடடிகள் நடத்தப்பட்டன. இதில், கபடி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டிகளின் போதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா கலந்துகொண்டு பேசினார். சைல்டு லைன் இயக்குனர் முகமது ஷேக் இப்ராகிம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story