எல்.இ.டி. பல்பு தயாரிப்பதற்கான பயிற்சி
எல்.இ.டி. பல்பு தயாரிப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்
வேப்பங்கனேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சமுதாயத் திறன் பள்ளி தொடங்கப்பட்டது. இதன் கீழ் எல்.இ.டி. பல்பு தயாரிப்பதற்கான 15 நாள் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.கே.மோகன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திட்ட மாவட்ட செயலாளர் என்.கங்காதரன், இளம் வல்லுநர் அன்பரசன், அணித் தலைவர் அரங்க. ஜீவசெந்தில்நாதன், திட்ட செயல் அலுவலர்கள் மு.எழிலரசன், எஸ்.கோமளா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்ப பயிற்சி முகாமில் 20 நபர்களுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு புதிய எல்.இ.டி.பல்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தேவைப்படுபவர்களுக்கு தனியாக தொழில் தொடங்க அரசு நிதி வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story