சிங்கம்புணரியில் வேலை வாய்ப்பு முகாம்


சிங்கம்புணரியில் வேலை வாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் வருகின்ற 10-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள ஒன்றிய நகர தி.மு.க. மற்றும் அனைத்து சார்பு அணிகள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வருகின்ற 10-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் அருகில் உள்ள எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி வளாகத்தில் காலை 8.45 முதல் மாலை 4 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள சுமார் 30 முன்னணி நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பி.இ. மற்றும் அனைத்து டிகிரி, தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் 2020-23-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் என அனைவரும் முகாமில் பங்கேற்கலாம். http://bit./y/Singampunari Job Fair Candidate Registraion என்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இந்த முகாமை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடக்கி வைக்கிறார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story