தேசிய வாக்காளர் தின விழிப்பணர்வு ஊர்வலம்
கே.வி.குப்பம் பகுதிகளில் தேசிய வாக்காளர் தின விழிப்பணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் பகுதிகளில் தேசிய வாக்காளர் தின விழிப்பணர்வு ஊர்வலம் நடைபெற்றன.
கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கீதா தலைமையில் தேசிய வாக்காளர் வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையிடத்து துணை தாசில்தார் பிரகாசம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், குறுவட்ட நில அளவர் குபேரன்ஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு தேசிய வாக்காளர் தின விழிப்பணர்வு உறுதிமொழி ஏற்றனர்.