மழையால் சேதமான நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி
மழையால் சேதமான நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில் உள்ள கத்தக்குறிச்சி, பாளையூர், மணியம் பலம், களங்குடி, வல்லத்திராகோட்டை, வாண்டாகோட்டை, பூவரசகுடி, கொத்தகோட்டை, தட்சிணபுரம், திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 900 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலம் தவறி பெய்த தொடர் மழையால் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதுகுறித்து விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண் அலுவலர்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று நெற்பயிர்கள் ேசதமானது குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதாகவும் கூறினர்.