சீர்காழி வடபாதி மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


சீர்காழி வடபாதி மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

சீர்காழி வடபாதி மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.பக்தர்கள் காவடி எடுத்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி ஈசான்ய தெருவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான வடபாதி மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோமளவல்லி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு காவடிகள் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story