பராசக்திமாரியம்மன் கோவில் திருவிழா
திருவையாறு பராசக்திமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு மேல வீதியில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு அலங்காரத்துடன் வாகனத்தில் எழுந்தருளி அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து காவடி எடுத்தும் அழகு குத்தியும் தங்கள் குழந்தைகளை தொட்டில் கட்டி தூக்கி பால்குடம் சுமந்தும் காவேரி ஆற்றில் இருந்து வானவேடிக்கையுடன் புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி கீழ வீதி தெற்கு வீதி என முக்கிய வீதிகளின் வழியாக சென்று சன்னதியை அடைந்தனர். பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story