பாக்ஸ் கிரிக்கெட் போட்டி


பாக்ஸ் கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 4 April 2023 1:00 AM IST (Updated: 4 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கில், சி.என்.ஐ. கட்டுமான அமைப்பு சார்பில் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கில், சி.என்.ஐ. கட்டுமான அமைப்பு சார்பில் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. லீக் சுற்று அடிப்படையில் போட்டிகள் நடந்தது. இதையொட்டி நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சி.என்.ஐ.-ரோட்டரி கிளப் ஆப் கிங் டவுன் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த சி.என்.ஐ. அணி 45 ரன்கள் எடுக்க, பின்னர் களமிறங்கிய ரோட்டரி கிளப் ஆப் கிங் டவுன் அணி 46 ரன்கள் எடுத்து வென்றது. வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை தொழிலதிபர் ரவி தியாகராஜன், பி.எஸ்.என்.ஏ. கல்லூரி டிரஸ்டி சூர்யா, ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரெத்தினம், சி.என்.ஐ. மண்டல இயக்குனர் கோபிசன் ஆகியோர் வழங்கினர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சி.என்.ஐ. அமைப்பு தலைவர் அருள் ஞானபிரகாசம், செயலாளர் வினோத்ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story