தூய்மை பணியாளர்கள் நலச்சங்க மண்டல மாநாடு
மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் நலச்சங்க மண்டல மாநாடு நடந்தது
மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், துாய்மைக்காவலர்கள், பள்ளி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறுப்பாளர்கள் கண்ணன், வீராசாமி, தட்சிணாமூர்த்தி உள்பட பலர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். கூட்டத்தில் கொரோனா காலக் கட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நலவாரிய அட்டைகளை தாட்கோ உதவி மேலாளர் சுசீலா வழங்கினார். இதில் துாய்மை பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 200 ஆக சம்பளம் உயர்த்தி வழங்கிய முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான வகையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் தஞ்சை திருவாரூர் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலர் பாபு நன்றி கூறினார்.