நாம் தமிழர் கட்சி கூட்டம்
வேதாரண்யம் அருகே நாம் தமிழர் கட்சி கூட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி தலைவர் முருகையன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மண்டல செயலாளர் அகஸ்டின்அற்புதராஜ், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ராமநாதபுரம் இலக்கியா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி முழுவதும் கோவில் இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட தலைவர் அறிவொளி, மாவட்ட பொருளாளர் மதியழகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏங்கல்ஸ், சட்டமன்ற தொகுதி துணை தலைவர் காத்தமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.