பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா


பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா
x

இருப்பு பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர்

கம்மாபுரம்,

கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பு கிராமத்தில் உள்ள பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி வருகிற 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதி காலையில் செடல் உற்சவம் தொடங்குகிறது, பின்னர் மாலையில் தேரோட்டமும், இரவு புராண நாடகமும் நடைபெற உள்ளது. மறுநாள்(சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அறிவின்சிகரம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story