ஐம்பொன் சிலைகள்-செப்பேடுகளை பார்த்துச்சென்ற பக்தர்கள்


ஐம்பொன் சிலைகள்-செப்பேடுகளை பார்த்துச்சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தர்கள் ஐம்பொன் சிலைகள்-செப்பேடுகளை பார்த்துச்சென்ற பக்தர்கள்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுரவாசல் அருகில் குபேர மூலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பொழுது பூமிக்கடியில் இருந்து ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருள்கள் குவியல், குவியலாக கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் செப்பேடுகள் உள்ளிட்ட பொருட்கள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. நேற்று குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை பார்த்து சென்றனர்.


Next Story