அங்காளம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


அங்காளம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:08 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அங்காளம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்ற நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், அதனை தொடர்ந்து ஸம்பத்ரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் கொடி மரத்தில் இருந்து அம்மன் சன்னதி வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் கலசம், சூலம், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை வடிவமைத்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீர்காழி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story