விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு


விக்கிரவாண்டி அருகே    குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

A child drowned in a puddle and died

விழுப்புரம்


விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூரை சேர்ந்தவர் நவீன்(வயது 35). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள்(33). இவர்களுக்கு தட்சண்(2) என்கிற குழந்தை இருந்தது. நேற்று மதியம் 1 மணிக்கு குழந்தை தட்சண் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். நவீன், கோவிந்தம்மாள் ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.

இந்த நிலையில், தூக்கத்தில் இருந்து எழுந்த தட்சண், வெளியே வந்து அருகே உள்ள நிலத்துக்கு நடந்து சென்றான். அப்போது கேசவன் என்பவரது நிலத்தில் உள்ள குட்டையில் தேங்கி இருந்த மழைநீரில் தட்சண் தவறி விழுந்துவிட்டான்.

சாவு

இதற்கிடையே வீட்டுக்கு வந்த நவீன், அங்கு குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் அந்த பகுதியில் தேடினார். அப்போது, அங்குள்ள குட்டையில் தேங்கி நின்ற மழைநீரில் குழந்தை தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியைடந்த அவர், ஓடோடி சென்று தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தட்சணை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவனது பெற்றோர் கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாக பகுதியே சோகத்தில் காணப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story