இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர் வீட்டில் 22½ பவுன் நகை திருட்டு


இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர் வீட்டில் 22½ பவுன் நகை திருட்டு
x

Theft of 22½ pounds of jewelery from the home of எ ESI hospital staff member

வேலூர்

வேலூர் அருகே இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர் வீட்டில் 22½ பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

22½ பவுன் நகை திருட்டு

வேலூரை அடுத்த துத்திப்பட்டு காமராஜர்நகரை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 58). இவர் வேலூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.

சமீம்பானு கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு விரிஞ்சிபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கினார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரும்படி கூறி உள்ளார்.

அதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண் செல்போனில் சமீம்பானுவிற்கு தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார். வீட்டின் அறைகளில் பொருட்கள், துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 22½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சமீம்பானு, பாகாயம் போலீசில் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு சமீம்பானு, வீட்டு வேலைக்கார பெண் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், சமீம்பானு வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

அதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story