குலவிளக்கு ஊராட்சியில் ரூ.25 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
kovil
ஈரோடு
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி ஒன்றியம் குலவிளக்கு ஊராட்சியில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பழமையான பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான 25.35 ஏக்கர் நிலத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிலர் பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பா கோர்ட்டில் பல்வேறு வழக்குகளும் நடந்து வந்தன.
இந்தநிலையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி தாசில்தார் கவுசல்யா, ஓய்வுபெற்ற தாசில்தார்கள் பழனிசாமி, அழகு ராஜன், செயல் அலுவலர் கீதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்து கோவில் நிலத்தை மீட்டார்கள். இதற்கான அறிவிப்பு பலகையும் ஒட்டப்பட்டது. நிலம் மீட்பு பணி நடந்தபோது சிவகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
Related Tags :
Next Story