வாலிபர் வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு; 5 பேர் கைது


தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு

தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ்பூபதி (வயது 26). இவர் கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று இரவு மகேஷ் பூபதி வீட்டுக்கு வந்த 5 பேர் கும்பல், அவர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். இதில் மகேஷ்பூபதியின் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது.

5 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு வீசியதாக, தூத்துக்குடி எம்பரர் தெருவை சேர்ந்த மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (25), மற்றும் ராபின்சன் (29), கண்ண பெருமாள் (22), ஜான் பிர்ட்டர்ஸ் (30), ஹரிஹரன் (24), ஆகிய 5 பேரை கைது செய்தார்.

அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story