தூத்துக்குடி யூனியன் பகுதியிலுள்ள 8 பஞ்சாயத்து பகுதியில் சாலை பணி மேற்கொள்ள முடிவு


தூத்துக்குடி யூனியன் பகுதியிலுள்ள  8 பஞ்சாயத்து பகுதியில்   சாலை பணி மேற்கொள்ள முடிவு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி யூனியன் பகுதியிலுள்ள 8 பஞ்சாயத்து பகுதியில் சாலை பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதிஅம்பா சங்கர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராமராஜ். வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜ். யூனியன் துணைத் தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.யூனியன் மேலாளர் பாலமுருகன் வரவு செலவு வளர்ச்சி பணி திட்டங்களை பற்றி அறிக்கைகளை வாசித்தார். கூட்டத்தில் மாப்பிள்ளை யூரணி, உமரிகோட்டை, முடிவைத்தானேந்தல், கோரம்பள்ளம், குமாரகிரி, சேர்வைக்காரன்மடம், தளவாய்புரம் அய்யன்டைப்பு உட்பட்ட பஞ்சாயத்து பகுதியில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, கால்வாய் அமைத்தல், சிமென்டு சாலை அமைத்தல், சரள் சாலை அமைத்தல் உள்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story