கள்ளிப்பட்டி அருகே ரூ.9¾ கோடியில் பாலம் திறப்பு விழா; வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கள்ளிப்பட்டி அருகே ரூ.9¾ கோடியில் பாலம் திறப்பு விழா; வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடையில் இடது மற்றும் வலது கரையில் வெள்ள தடுப்பு சுவர் பணி மற்றும் 2020-21 ஆம் ஆண்டின் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.9 கோடியே 60 லட்சத்தில் பாலம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பங்களாப்புதூர் ராஜீவ்காந்தி சிலை முதல் மார்க்கெட் வழியாக சாலை அமைத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ரூ.4 கோடியே 70 லட்சத்தில் தார்சாலை அமைத்தல் பணிக்கான பூமி பூஜை பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி மற்றும் டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.