காமராஜர் பிறந்தநாள் விழாபேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான பேச்சுப்போட்டி மரப்பாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, 4-ம் மண்டல தலைவர் எச்.எம்.ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் எம்.பி.தேவராஜ், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இதில் 2-ம் மண்டல தலைவர் ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் அம்மன் மாதேஸ்வரன், எம்.ஆர்.அரவிந்தராஜ், ரா.கனகராஜன், வக்கீல் பாஸ்கர்ராஜ், சா.மோகன், ஏ.சி.சாகுல் ஹமீத், சித்தோடு பிரபு, முன்னாள் கவுன்சிலர்கள் கை சுப்பிரமணியம், அன்னபூரணி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய் கண்ணா, கட்சியின் முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.