உடம்பு சரி இல்லாத மகளுக்காக தெப்பத்தை உருவாக்கி ஆற்றை கடந்த தந்தை - உருக வைக்கும் பாச போராட்டம்
உடல் நலம் குன்றிய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மூங்கில் தெப்பத்தில் நதியை கடந்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி,
ஆந்திராவில், உடல் நலம் குன்றிய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மூங்கில் தெப்பத்தில் நதியை கடந்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள ரெப்பா பகுதியிலிருந்து இதர பகுதிகளுக்கு செல்ல நாகாவளி ஆற்றை கடந்து மக்கள் செல்லும் சூழல் உள்ளது. ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், சிறு ஓடங்களில் மக்கள் ஆற்றை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூங்கில் குச்சிகளை கொண்டு தெப்பம் ஒன்றை உருவாக்கிய அந்நபர், அதில் மகளை அமர வைத்து இளைஞர்கள் சிலரின் உதவியுடன் அதிகளவில் நீர் பாய்ந்தோடும் ஆற்றை கடந்து சென்றார்.
Related Tags :
Next Story