ரூ.1¼ கோடியில் கட்டுமான பணிகள்


ரூ.1¼ கோடியில் கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கட்டுமான பணிகள் செயற்பொறியாளர் ஆய்வு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர் அறை, நோயாளிகள் சிகிச்சை அறைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் பால ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சோண்டி ரோஸ், ஒப்பந்ததாரர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story