அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. பருத்தி 6 ஆயிரத்து 500 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 11-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 451-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் தேங்காய் 35 ஆயிரம் கொண்டு வந்திருந்தனர். இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.17.17-க்கும், அதிகபட்சமாக ரூ.23.17-க்கும் என மொத்தம் ரூ.69 ஆயிரத்து 820-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய் 68 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.7ஆயிரத்து 159-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 639-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 145-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.


Next Story