ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி
நெல்லை பேட்டையில் ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை காந்திநகர் மற்றும் ஷேக் மதார் பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பிரதான சாலை, குறுக்கு சாலைகள் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதனை நேற்று மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
அதனை தொடர்ந்து டவுன் பேட்டை திருத்து பகுதியில் மின் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் குறைவான மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்து மின் பகிர்மான தரத்தினை உறுதி செய்யும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதனையும் மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் நெல்லை மண்டல தலைவர் மகேஷ்வரி, கவுன்சிலர் சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் விவேகானந்தன், நெல்லை நகர்ப்புற மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குடி, டவுன் உதவி செயற்பொறியாளர் சங்கர், பேட்டை உதவி பொறியாளர் சரவணன், கட்டுமான உதவி பொறியாளர் ஜன்னத்துல் ஷிபாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.