2 வாரத்தில் ரூ.1 கோடி வரி வசூல்


2 வாரத்தில் ரூ.1 கோடி வரி வசூல்
x

குடியாத்தம் நகராட்சியில் 2 வாரத்தில் ரூ.1 கோடி வரி வசூல் செய்யப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வரி, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வரை ரூ.10 கோடியே 18 லட்சம் நிலுவையாக இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் வரிவசூலில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி. குபேந்திரன் உத்தரவின் பேரில், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆலோசனை பேரில் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு தலைமையில், நகராட்சி மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்ட வரிவசூல் குழுக்கள் அமைக்கப்பட்டு குடியாத்தம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு வாரமாக தீவிரமாக வரி வசூலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ரூ.1 கோடி வரி வசூல் ஆனதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரி வசூல் நடைபெறும் எனவும், அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, கோர்ட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story