ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:28 AM IST (Updated: 15 Jun 2023 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஜமாபந்தி நிறைவு விழாவில் 104 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட 93 குக்கிராமங்களுக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 281 மனுக்கள் பெறப்பட்டன. 104 மனுக்கள் ஏற்கப்பட்டு, ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் எம்.சுந்தரேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சப்-கலெக்டர் பானு, ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு 104 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் கூட்டுறவு பால் சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், ஆத்மா தலைவர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.


Next Story