ராமநாதபுரம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை


ராமநாதபுரம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை
x

ராமநாதபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது.

மழை

ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் சீசன் முடிந்த போதும் கூட வெயிலின் தாக்கம் இல்லாத நிலையில் கத்திரி வெயில் சீசன் முடிந்து 3 வாரங்கள் கடந்த பின்னர் தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் நேற்று காலை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

குறிப்பாக கேணிக்கரை, ஓம்சக்தி நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. நகரின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை.

கடும் அவதி

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் அம்மா பூங்கா எதிரே உள்ள சாலையில் இருந்து அரண்மனை செல்லும் சாலையான ஓம்சக்தி நகர் சாலை முழுவதும் மழைநீரானது வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

வெயிலின் தாக்கத்தால் மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் நேற்று 1 மணி நேரம் பெய்த மழை பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.


Next Story