மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்பனை
மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்பனை
திருப்பூர்
ஓணம் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கேரள மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். திருப்பூரில் வாழும் மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் சுபமுகூர்த்த தினம் என்பதாலும் அனைத்து பூக்களின் விலை அதிகமாக இருந்தது.
அதன்படி நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,400-க்கும், முல்லை ரூ.600-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.300-க்கும், செண்டு மல்லி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், தாமரை ஒன்று ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினத்தை விட நேற்று பூக்களின் விலை குறைந்திருந்தது. மழை பொழிவுகாரணமாக பூக்களின் விலை அதிகமாகவே காணப்பட்டன. செவ்வந்தி பூ அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. பூ மார்க்கெட்டில் அதிகம் பேர் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.