1 கிலோ இஞ்சி ரூ.210-க்கு விற்பனை


1 கிலோ இஞ்சி ரூ.210-க்கு விற்பனை
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 1 கிலோ இஞ்சி ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 1 கிலோ இஞ்சி ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு

கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பஸ் நிலையம், திட்டங்குளத்தில் வியாபாரிகள் தனியாக கடைகள் அமைத்தும், கோவில்பட்டி மெயின் ரோட்டில், தெருக்களில் காய்கறி கடைகள் அமைத்தும் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக வெயில் கொடுமை அதிகரித்து வருவதாலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்ததாலும் கோவில்பட்டி நகருக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதனால் காய்கறி விலைகள் கடந்த வாரத்தை விட 10 முதல் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

இஞ்சி ரூ.210-க்கு விற்பனை

அதன்படி 1 கிலோ இஞ்சி ரூ.210-க்கும், மிளகாய் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரையும், கத்தரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.35-ரூ.40, அவரைக்காய் ரூ 90-ரூ.100, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60-ரூ.70, பீட்ரூட் ரூ.50-ரூ.60, சவ்சவ் ரூ.30, வெங்காயம் ரூ.60-70, முருங்கை ரூ.25-30, மல்லி ரூ.110, கருவேப்பிலை ரூ.30- க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story